கிராம மக்கள் தர்ணா


கிராம மக்கள் தர்ணா
x
தினத்தந்தி 12 April 2023 12:30 AM IST (Updated: 12 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட காமாட்சிபுரம் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், குடகனாற்றுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும்படி கூறியிருந்தனர். இந்த நிலையில் நேற்று தமிழ்ப்புலிகள் கட்சியின் மாணவர் அணி மாவட்ட செயலாளர் கணேசபிரகாஷ் தலைமையில், அந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், பட்டாளம்மன் கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திடீரென்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story