உலக்கையை நிறுத்தி சூரிய கிரகணத்தை அறிந்த கிராம மக்கள்


உலக்கையை நிறுத்தி சூரிய கிரகணத்தை அறிந்த கிராம மக்கள்
x

கிராமமக்கள் உலக்கையை நிறுத்தி சூரிய கிரகணத்தை அறிந்தனர்.

வேலூர்

நாடு முழுவதும் மாலை 5 மணி முதல் 5.45 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இதைப் பார்ப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர். கிராமப் பகுதிகளில் காலம் காலமாக தொன்று தொட்டு வரும் பாரம்பரிய வழக்கப்படி சூரிய கிரகணத்தை அறிய வெண்கல தட்டில் உலக்கையை நிறுத்தி எந்த ஆதரவும் இல்லாமல் உலக்கை நின்றால் சூரிய கிரகணம் பிடித்துள்ளது என பொதுமக்கள் அறிந்து கொள்வார்கள். அதன்படி நேற்று அணைக்கட்டு தாலுகா அப்புக்கல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாலை 5 மணிக்கு மஞ்சள், சுண்ணாம்பு கரைத்து வெண்கல தட்டில் ஊற்றி உலக்கை ஒன்றை நிறுத்தி வைத்தனர். சூரிய கிரகணம் மெல்ல மெல்ல தொடங்கிய போது உலக்கை தானாகவே 100 டிகிரி நேர்கோட்டில் நின்று பொதுமக்களை அசத்தியது. பொதுமக்கள் வெறும் கண்ணால் சூரியனை பார்க்காமல் உலக்கையைப் பார்த்து சூரிய கிரகணம் பிடித்துள்ளது என அறிந்து கொண்டனர்.


Next Story