ராதாபுரம் யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
ராதாபுரம் யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
ராதாபுரம்:
ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட சீலாத்திகுளம் கிராமத்தில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து யூனியன் அலுவலகத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சீலாத்திகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் ராதாபுரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு சென்று ஆழ்குழாய் கிணற்றை சரிசெய்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story