போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x

நெல்லையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

திருநெல்வேலி

மானூர் பகுதி மக்கள் தங்கள் ஊர்களில் உள்ள இளைஞர்கள் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு இரவு நேரங்களில் அவர்களை கைது செய்வதாக கூறியும், இதை கண்டித்தும் இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வதை நிறுத்த வேண்டும் என்று கூறியும் நேற்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கு நடந்த நெல்லை மாவட்ட போலீஸ் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story