கிராம நிர்வாக அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
கிராம நிர்வாக அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்
திண்டுக்கல்
சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுளிபட்டியில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக மகேஸ்வரன் (வயது 42) என்பவர் உள்ளார். இந்த நிலையில் அஞ்சுகுளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் நேற்று கிராம நிர்வாக அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த்துறை தொடர்பான சான்றிதழ்கள் கேட்டு வருபவர்களுக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பு செய்வதாக கூறி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால் சிறிது நேரத்தில் அவர்களாகவே கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story