இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி


இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி
x

இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி

மதுரை

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள வஞ்சிநகரத்தில் உள்ள கருப்பணசாமி கோவிலுக்கு சொந்தமான பட்டத்துக்காளை வளர்த்து வந்தனர். கோவில் காளையானது புகழ்பெற்ற அவனியாபுரம், சிராவயல், கண்டுபட்டி, உள்ளிட்ட பல்வேறு ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றிவாகை சூடி பெருமை சேர்த்து தந்தது. இந்தநிலையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பட்டத்துக்காளை உயிரிழந்தது. இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. பின்னர் கோவில் காளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தினர். கிராம பெண்கள் கும்மியடித்து வழிபட்டனர். கோவில்காளையை வண்ண மலர்களால் அலங்கரித்து ஊர்வலமாக எடுத்து சென்று கருப்பணசாமி கோவில் வளாகத்தில் அடக்கம் செய்தனர்.


Related Tags :
Next Story