கோவில்பட்டி உதவி கலெக்டர்அலுவலகம் முன்பு கிராமமக்கள் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டி உதவி கலெக்டர்அலுவலகம் முன்பு கிராமமக்கள் ஆர்ப்பாட்டம்
x

விளாத்திகுளம் அருகே தனியார் கல்குவாரியை மூடக்கோரி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

விளாத்திகுளம் அருகே தனியார் கல்குவாரியை மூடக்கோரி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விளாத்திகுளம் தாலுகா சென்னம்பட்டி பஞ்சாயத்து மேல வெங்கடாசலபுரம் கிராம மக்கள், தனியார் கல்குவாரியை மூடக்கோரி கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் உதவிகலெக்டர் மகாலட்சுமியிடம் கொடுத்த கோரிக்கை மனுவில்,

சென்னம்பட்டி பஞ்சாயத்து மேல வெங்கடாசலபுரம், சிவலார்பட்டி, கம்பத்துப் பட்டி, எல்.வி. புரம், மேல அருணாசல புரம், மணியக்காரன் பட்டி போன்ற கிராமங்களில் தனியார் சிமெண்டு ஆலை நிர்வாகத்தினர் விவசாயிகளிடம் நிலங்களை விலைக்கு வாங்கினர். 1984-ஆம் ஆண்டு முதல் இந்த நிலங்களில் சிமெண்டு தயாரிக்க பயன்படும் சுண்ணாம்புக் கல் எடுப்பதற்காக இதுவரை 400 அடி ஆழம் வரை பாறையை சக்தி வாய்ந்த வெடி மருந்துகளால் பிளந்து, சுண்ணாம்பு கற்கள் தோண்டி எடுத்து சிமெண்டு தயாரிக்கப்படுகிறது. கடந்த 37 ஆண்டுகளாக மேல வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சுற்றியுள்ள நிலங்களில் தினமும் பாறையை தோண்டி சுண்ணாம்புக்கல் வாகனங்களில் ஏற்றி கொண்டு செல்லப் படுகிறது.

விவசாயம் பாதிப்பு

கிராமத்தின் அருகே குவாரியில் வெடி வெடிக்கும் சத்தத்தில் மக்கள் நிம்மதி இழந்தனர். விவசாய நிலங்களிலும் கற்கள் விழுவதால், விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுஹித்து பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 100 வீடுகள் இருந்த கிராமத்தில் வசிக்க முடியாமல், தொழில் தேடி வெளியூர்களுக்கு விவசாயிகள் சென்று விட்டார்கள்.

குவாரியை மூட வேண்டும்

நிலத்தடி நீரும் படுபாதாளத்திற்கு சென்று விட்டது. ஆலை நிர்வாகம் பாதிக்கப் பட்ட எங்கள் கிராமத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஆலை நிர்வாகம் கிராமத்திற்கு அடிப்படை பணிகளை மேற்கொள்ளவும், கிராமத்தின் அருகில் செயல்படும் குவாரியை மூட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மனுவைப் பெற்றுக் கொண்ட உதவி கலெக்டர் மகாலட்சுமி 2 வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட துறை மூலம் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story