தீமிதி திருவிழா நடத்த கிராம மக்கள் எதிர்ப்பு


தீமிதி திருவிழா நடத்த கிராம மக்கள் எதிர்ப்பு
x

புதுப்பேட்டை அருகே பிரச்சினைக்குரிய இடத்தில் கோவில் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முள்வேலி அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

புதுப்பேட்டை:

பண்ருட்டி அருகே உள்ள வையாபுரிபட்டினம் கிராமத்தில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. பங்குனி உத்திர விழாவையொட்டி கடந்த 13 ஆண்டுக்கு முன்பு தீமிதி திருவிழா அரசுக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இடத்தில் தீமிதி திருவிழா நடத்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் நேற்று தீமிதி திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த இடத்திற்குள் யாரும் செல்லாத வகையில் முள்வேலி அமைக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

போலீஸ் குவிப்பு

இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், தீமிதி திருவிழா நடத்தக்கூடாது என்றனர். மேலும் இது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரிக்க போலீசார் பரிந்துரை செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story