அகல ரெயில் பாதை பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்


அகல ரெயில் பாதை பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்
x

வேதாரண்யம் அருகே பாலத்துக்கு அடியில் மழைநீர் தேங்கியதால் அகல ரெயில் பாதை அமைக்கும் பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே பாலத்துக்கு அடியில் மழைநீர் தேங்கியதால் அகல ரெயில் பாதை அமைக்கும் பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.

மழைநீர் தேங்கியது

திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தியன்பள்ளி வரை அகல ெரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக வேதாரண்யம் அருகே வைத்தியார்காட்டில் முன்பு ெரயில்வே கேட் இருந்த இடத்தில் ெரயில்வே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்துக்கு அடியில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பாலத்தில் தேங்கும் மழைநீர் வடிய வைப்பதற்கு பாலத்தின் இருபுறமும் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் ெரயில்வே துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் ெரயில்வே நிர்வாகம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அகல ெரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.

பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள்

இந்தநிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் பாலத்தின் அடியில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அகல ரெயில்பாதை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

நாளை(அதவாது இன்று) ெரயில்வேஅதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி வடிகால் வசதி செய்து கொடுத்தால் மட்டுமே தொடர்ந்து அகல ெரயில்பாதை அமைக்கும்பணி நடக்க அனுமதிப்போம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.


Next Story