சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டம்

சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டம்
x

நாகை வடகுடியில் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை வடகுடியில் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாற்று நட்டு போராட்டம்

நாகை அருகே வடகுடி ஊராட்சி பகுதாயம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் தொட்டி வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாைக மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் இ்ந்த பகுதியில் உள்ள சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சாலையை சீரமைக்கக்கோரி சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது சேறும், சகதியுமான சாைலயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story