முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்ற கிராம மக்கள்
மண்டபம் தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பில் வாலாந்தரவைவந்த முதல்-அமைச்சருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அங்கு புதிதாக அமைக்கப்பட்ட 100 அடி கொடிக்கம்பத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி கொடியை ஏற்றினார்.
மண்டபம் தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பில் வாலாந்தரவைவந்த முதல்-அமைச்சருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அங்கு புதிதாக அமைக்கப்பட்ட 100 அடி கொடிக்கம்பத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி கொடியை ஏற்றினார்.
முதல்-அமைச்சர் வருகை
ராமநாதபுரம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலை அருகே பேராவூரில் நடைபெற்ற 10 நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்ற தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ராமநாதபுரம் வந்தார். இதைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு மாலை 6 மணி அளவில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புறப்பட்டார்.
ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை வழியில் செல்லக்கூடிய வாலாந்தரவை என்ற கிராமத்தில் தி.மு.க. மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளரும் வக்கீலுமான பிரவீன்குமார், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது நினைவாக 100 அடி கொண்ட கொடிக்கம்பம் ஏற்பாடு செய்திருந்தார்.
கட்சி கொடி ஏற்றினார்
இதற்கான தொடக்க விழா மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனத்தில் இருந்தவாறு ரிமோட் கன்ட்ரோல் மூலம் தி.மு.க. கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.