வில்லிசேரி நாகதேவதை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
வில்லிசேரி நாகதேவதை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில் நாகதேவதை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்றுஅதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
மேளதாளங்கள் முழங்க யாகசாலை யிலிருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோவில் பிரகாரம் வழியாக எடுத்து சென்று கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மற்றும் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story