விழுப்புரம் நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்


விழுப்புரம் நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்
x

என் நகரம்- என் பெருமை நிலையை உருவாக்கிட விழுப்புரம் நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் காலை நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள சுவர்களில் விழிப்புணர்வு ஓவியம் வரையும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள், உறுப்பினர்கள் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் பணியை கலெக்டர் மோகன், தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பொதுமக்களுக்கு அறிவுரை

இதில் பஸ் நிலைய வளாக சுற்றுச்சுவர்களில் என் நகரம் - என் பெருமை என்ற நிலையை பொதுமக்கள் உருவாக்கும் வகையில் பல்வேறு வகையிலான விழிப்புணர்வு குறித்த சுவர் ஓவியங்களை மாணவ- மாணவிகள் வரைந்தனர். அப்போது பொதுமக்கள், விழுப்புரம் நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் இருந்திடவும், தூய்மையினை பாதுகாக்க உறுதுணையாக இருந்திட வேண்டுமெனவும் கலெக்டர் மோகன் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, தூய்மையை பாதுகாக்கும் வண்ணம், தூய்மை இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினையும் கலெக்டர் மோகன், லட்சுமணன் எம்.எல்.ஏ. ஆகியோர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்து பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கையொப்பமிடுமாறு அறிவுறுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகர்நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியன், நகரமைப்பு அலுவலர் கோகுல், சுகாதார ஆய்வாளர் ரமணன், நகரமன்ற கவுன்சிலர்கள் மணவாளன், புருஷோத்தமன், சங்கர், தீபா, ஸ்ரீதேவி, தமிழ்நாடு ஓவியர் சங்க மாவட்ட தலைவர் அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story