ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்த விழுப்புரம் மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் 1-ந் தேதி நடக்கிறது


ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்த விழுப்புரம் மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் 1-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்த விழுப்புரம் மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் 1-ந் தேதி நடக்கிறது என கலெக்டா் தொிவித்துள்ளாா்.

விழுப்புரம்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுவழிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் பள்ளி மாணவ- மாணவிகள், பொதுப்பிரிவினர், ஆண்கள், பெண்கள் என 4 பிரிவுகளாக 5 கிலோ மீட்டர் தூரமும், திருநங்கைகள் ஒரு பிரிவாக 3 கிலோமீட்டர் ஓட்ட போட்டியும் நடத்தப்படவுள்ளது. இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.1,000, 4 முதல் 10 வரை ரூ.500 வீதம் 5 பிரிவினர்களுக்கும் பரிசளிக்கப்படும். இப்போட்டியில் கலந்துகொண்டு போட்டி தூரத்தை நிறைவு செய்யும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

மாரத்தான் போட்டிகள் 1.5.2023 அன்று மாலை 3.30 மணியளவில் புதிய பஸ் நிலையம் அருகில் தளபதி திடல் வளாகத்திலிருந்து தொடங்கப்படும். போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரை எம்.ஜி.ஆர். உள்விளையாட்டரங்கில் பதிவு மேற்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9566883394 என்ற செல்போன் எண்ணை தொடர்புகொள்ளலாம். இப்போட்டிகளில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், பொதுப்பிரிவினர்கள், திருநங்கைகள் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டியும் மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.


Next Story