விழுப்புரம் மாவட்டத்தில் 51 வாக்குச்சாவடிகளை மாற்றம் செய்ய நடவடிக்கை கலெக்டர் மோகன் தகவல்


விழுப்புரம் மாவட்டத்தில்  51 வாக்குச்சாவடிகளை மாற்றம் செய்ய நடவடிக்கை  கலெக்டர் மோகன் தகவல்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 51 வாக்குச்சாவடிகளை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை இறுதி செய்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளான செஞ்சி தொகுதியில் 304 வாக்குச்சாவடிகளும், மயிலம் தொகுதியில் 265 வாக்குச்சாவடிகளும், திண்டிவனம் (தனி) தொகுதியில் 266 வாக்குச்சாவடிகளும், வானூர் (தனி) தொகுதியில் 277 வாக்குச்சாவடிகளும், விழுப்புரம் தொகுதியில் 289 வாக்குச்சாவடிகளும், விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும், திருக்கோவிலூர் தொகுதியில் 286 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,962 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன.

51 வாக்குச்சாவடிகள் மாற்றம்

இதில் அமைவிடம் குறித்து ஏதேனும் ஆட்சேபனை மற்றும் வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்வது தொடர்பாக ஏதேனும் கோரிக்கைள் இருந்தால் கடந்த 6.9.2022-க்குள் தெரிவிக்குமாறு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கேட்கப்பட்டது. அதனடிப்படையில் செஞ்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்செவலம்பாடியில் வாக்குச்சாவடி எண் 12, 13, 14, பெரிய நொளம்பையில் வாக்குச்சாவடி எண் 18, பின்னனூரில் வாக்குச்சாவடி எண் 71, தேவனூரில் வாக்குச்சாவடி எண் 52, வடபாலையில் வாக்குச்சாவடி எண் 120, மேல்புதுப்பட்டில் வாக்குச்சாவடி எண் 121, 122, மேல்அருங்குணத்தில் வாக்குச்சாவடி எண் 123, மேல்பாப்பாம்பாடியில் வாக்குச்சாவடி எண் 162, 163, போத்துவாயில் வாக்குச்சாவடி எண் 187, 188, துத்திப்பட்டில் வாக்குச்சாவடி எண் 201, கெங்கவரத்தில் வாக்குச்சாவடி எண் 221, தேவதானம்பேட்டையில் வாக்குச்சாவடி எண் 224, 226 என மொத்தம் 18 வாக்குச்சாவடிகளையும்,

வானூர் தொகுதியில் டி.பரங்கினியில் வாக்குச்சாவடி எண் 8, வெங்காரத்தில் வாக்குச்சாவடி எண் 14, எடச்சேரியில் வாக்குச்சாவடி எண் 19, கிளியனூரில் வாக்குச்சாவடி எண் 23, பரிக்கல்பட்டில் வாக்குச்சாவடி எண் 43, வில்வநத்தத்தில் வாக்குச்சாவடி எண் 58, சின்னகொழுவாரியில் வாக்குச்சாவடி எண் 60, நெசலில் வாக்குச்சாவடி எண் 107, கரசானூரில் வாக்குச்சாவடி எண் 158, 159, 160, கொடுக்கூரில் வாக்குச்சாவடி எண் 182, மிட்டாமண்டகப்பட்டில் வாக்குச்சாவடி எண் 248, 249, கலிஞ்சிக்குப்பத்தில் வாக்குச்சாவடி எண் 276, 277 என மொத்தம் 16 வாக்குச்சாவடிகளையும், விழுப்புரம் தொகுதியில் குமளத்தில் வாக்குச்சாவடி எண் 277, 278 என 2 வாக்குச்சாவடிகளையும், விக்கிரவாண்டி தொகுதியில் எசாலத்தில் வாக்குச்சாவடி எண் 188, 189, 190, வடகுச்சிப்பாளையத்தில் வாக்குச்சாவடி எண் 216 என 4 வாக்குச்சாவடிகளையும், திருக்கோவிலூர் தொகுதியில் கழுமலத்தில் வாக்குச்சாவடி எண் 9, கோட்டகத்தில் வாக்குச்சாவடி எண் 10, குலதீபமங்கலத்தில் வாக்குச்சாவடி எண் 15,16, வீரபாண்டியில் வாக்குச்சாவடி எண் 31, 33, அருணாபுரத்தில் வாக்குச்சாவடி எண் 41, 42, குடமுருட்டியில் வாக்குச்சாவடி எண் 74 என 11 வாக்குச்சாவடிகளையும் ஆக மொத்தம் வரைவு வாக்குச்சாவடி பட்டியலில் 51 வாக்குச்சாவடிகளை மாற்றம் செய்வது தொடர்பாக மேல்நடவடிக்கை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட உள்ளது என்று கலெக்டர் மோகன் தெரிவித்தார்.

மின்னணு எந்திரங்கள் ஆய்வு

முன்னதாக கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் கலெக்டர் மோகன், திறந்து பார்வையிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story