விழுப்புரம் குப்பை உரக்கிடங்கில் நகர மன்ற தலைவர் ஆய்வு


விழுப்புரம் குப்பை உரக்கிடங்கில் நகர மன்ற தலைவர் ஆய்வு
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் குப்பை உரக்கிடங்கில் நகர மன்ற தலைவர் ஆய்வு செய்தாா்.

விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பைகளை கொண்டு உரமாக தயாரித்து விவசாய பயன்பாட்டிற்கு அனுப்பவும், மக்காத குப்பைகளை தீ வைத்து எரிக்கவும் நகராட்சி நிர்வாகம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரக்கிடங்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதில் உரக்கிடங்கிற்கு கொண்டு வரப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு ராட்சத எந்திரம் மூலம் லாரிகளில் ஏற்றப்பட்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தநிலையில் அய்யங்கோவில்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் உரக்கிடங்கை நகர மன்ற தலைவர் சர்க்கரை தமிழ்ச்செல்வி பிரபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ராட்சத எந்திரம் மூலம் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும் பணியை பார்வையிட்ட அவர் பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பல ஆண்டுகளாக சேமிக்கப்பட்டுள்ள இந்த குப்பைகள் தரம் பிரிக்கும் பணிகளை விரைந்து முடித்து தூய்மையான நகராட்சியாக மாற்ற முன்வர வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். அப்போது ஆணையாளா் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story