விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு


விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்   கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
x

விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு இருதயராஜ் தலைமையில் போலீசாரும் மற்றும் அமைச்சு பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அதாவது இந்திய குடிமகன், குடிமகளாகிய நான், முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன், பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பஸ் நிலையம் போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதை தடுத்திட பாடுபடுவேன் என உறுதிமொழி ஏற்றனர்.


Next Story