ஆரம்ப சுகாதார நிலையத்தில் வில்வநாதன் எம்.எல்.ஏ. ஆய்வு


ஆரம்ப சுகாதார நிலையத்தில் வில்வநாதன் எம்.எல்.ஏ. ஆய்வு
x

ஆம்பூர் கஸ்பா பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வில்வநாதன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

ஆம்பூர் நகரம் கஸ்பா பகுதியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்துவைத்துள்ளார். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வில்வநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து கரும்பூர் ஊராட்சியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற விதவை பெண் பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆம்பூர் நகரமன்ற தலைவர் ஏஜாஸ்அஹ்மத், துணைத் தலைவர் ஆறுமுகம், ஒன்றியக் குழு துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன், நகராட்சி ஆணையர் ஷகிலா, நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், மாவட்ட கால்நடை உதவி இயக்குனர் முரளி, கால்நடை மருத்துவர்கள், ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா கணேஷ், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story