அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை திரு விழாவையொட்டி நேற்று கருணாம்பிகை தேரோட்டம் நடந்தது. அதே போல் முருகன், சண்டிகேசுவரர் தேர்களை சிறுவர்கள், சிறுமிகள் இழுத்தனர்.
அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை திரு விழாவையொட்டி நேற்று கருணாம்பிகை தேரோட்டம் நடந்தது. அதே போல் முருகன், சண்டிகேசுவரர் தேர்களை சிறுவர்கள், சிறுமிகள் இழுத்தனர்.
அவினாசி
அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை திரு விழாவையொட்டி நேற்று கருணாம்பிகை தேரோட்டம் நடந்தது. அதே போல் முருகன், சண்டிகேசுவரர் தேர்களை சிறுவர்கள், சிறுமிகள் இழுத்தனர்.
அவினாசிலிங்கேசுவரர் கோவில்
அவினாசியில் வரலாற்று சிறப்புவாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடந்தது. அதன்பின்னர் பெரிய தேர் இழுத்து நிலை சேர்க்கப்பட்டது.
இதையடுத்து நேற்றுஅம்மன் ேதரோட்டம் நடந்தது. அதன்படி சிறிய தேரில் (அம்மன் தேர்) கருணாம்பிகை எழுந்தருளி பகல் 11 மணியளவில் தேரை வடம்பிடித்து இழுத்தனர். திருத்தேர் கடைவீதி, மேற்கு, வடக்கு, கிழக்கு ரதவீதிவழியாக வலம் வந்து பிற்பகல் 3 மணியளவில் நிலை சேர்ந்தது
சிறுவர்-சிறுமிகள்
இதைதொடர்ந்து சிறிய தேர்களான சுப்பிரமணியர் தேர், சண்டிகேசுவரர் ஆகிய சிறிய தேர்கள் இழுக்கப்பட்டது. இந்த தேர்களை சிறுவர்கள், சிறுமிகள் இழுத்து சென்றனர். அதன்பின்னர் மாலையில் சிறிய தேர்களும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் திருப்பூர், அவினாசி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.