வினைதீர்த்த மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
வாய்மேடு அருகே வினைதீர்த்த மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
நாகப்பட்டினம்
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த வெள்ளிகிடங்கு வினைதீர்த்த மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இதில் சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம், மஞ்சள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ணமலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story