சங்கரன்கோவிலில் விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு


சங்கரன்கோவிலில் விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு
x

சங்கரன்கோவிலில் விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில்- கழுகுமலை சாலையில் அமைந்துள்ள அக்னி காளியம்மன் கோவில் முன்பு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை விநாயகர் சிலையை கழுகுமலை சாலை வழியாக கொண்டு செல்வோம் என்று கூறி இந்து முன்னணியினர் அதற்கான முயற்சிகள் ஈடுபட்டனர். அதற்கு போலீசார், இந்து சமய அறநிலைத்துறையினர், வருவாய்த்துறையினர் அனுமதி மறுத்தனர்.

இதனால் இந்து முன்னணியினருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாததால் அதிகாரிகள் குழுவினர், விநாயகர் சிலையை பறிமுதல் செய்தனர். பின்னர் சுவாமி சன்னதி முன்பு கொண்டு வந்து அந்த சிலையும் தாமிரபரணி ஆற்றில் கரைப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.


Next Story