செல்வவிநாயகர் கோவிலில் 6-ம் ஆண்டு விழா


செல்வவிநாயகர் கோவிலில் 6-ம் ஆண்டு விழா
x
திருப்பூர்


திருப்பூர் சாமுண்டிபுரம் ரோடு பி.வி.ஜி.நகர், வையாபுரி நகர் இடையே கணேசபுரத்தில் செல்வவிநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 6-ம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. நேற்று காலை 10 மணி முதல் கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம், அபிஷேக ஆராதனை, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செல்வவிநாயகர் கோவில் விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story