விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
எட்டயபுரம் அருகே விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள அயன்ராஜாப்பட்டி கிராமத்தில் விநாயகர், காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து மஹா பூர்ணாகுதி, வேதிகா அர்ச்சனை, யாத்ரா தானம், யாகசாலை பிரவேஷம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. 10 மணிக்கு மேளதாளம் முழங்க புனித நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலின் விமான கோபுரங்களுக்கு ஊற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் காளியம்மன், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.