விநாயகர் கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா


விநாயகர் கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா
x

விநாயகர் கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கிழக்குமேடு பகுதியில் பழமை வாய்ந்த முனீஸ்வரர் மற்றும் ராமாபுரத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில் புதிதாக விநாயகர் கோவில் கட்டப்பட்டு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதன் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் 501 பால்குடங்கள் எடுத்து வந்து ராமாபுரத்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story