பெண் காவலரிடம் அத்துமீறல் - திமுக நிர்வாகிகள் 2 பேர் தற்காலிக நீக்கம்


பெண் காவலரிடம் அத்துமீறல் -  திமுக நிர்வாகிகள் 2 பேர் தற்காலிக நீக்கம்
x

திமுகவை சேர்ந்த பிரவீன், ஏகாம்பரம் ஆகியோரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

சென்னை,

பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக இளைஞர் அணியினரை கைது செய்ய வேண்டும் என்று பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்தநிலையில் அவர்களை போலீசார் கைது செய்துள்ளநிலையில்,

சென்னை, விருகம்பாக்கத்தில் திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரத்தில்

திமுக நிர்வாகிகள் 2 பேரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவை சேர்ந்த பிரவீன், ஏகாம்பரம் ஆகியோரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story