விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவில் தேரோட்டம்


விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவில் தேரோட்டம்
x

விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி பிரம்மோற்சவ திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி பிரம்மோற்சவ திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

பிரம்மோற்சவ திருவிழா

விருதுநகரில் பழமை வாய்ந்த மீனாட்சி, சொக்கநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 19-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவினை முன்னிட்டு தினமும் அன்னம், குதிரை, யானை, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். விழாவில் நேற்று முன்தினம் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

தேரோட்டம்

இதையடுத்து நேற்று காலை 9.05 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விருதுநகர் மேலரதவீதி, வடக்கு ரத வீதி, மெயின் பஜார், தெற்கு ரத வீதி வழியாக வந்த தேர் 11 மணி அளவில் நிலையை அடைந்தது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சித்ரகலா, மாரியப்பன் மற்றும் போலீசார் செய்திருந்தனர். பக்தர்களுக்கு தேவையான தண்ணீர் வசதியை நகராட்சி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். வருகிற 31-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகின்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பிரம்மோற்சவ அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.


Next Story