விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம்
விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம் நடைபெற்றது
விருதுநகர்
விருதுநகர்
விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம் தலைவர் சுமதி ராஜசேகர் தலைமையில் யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆமத்தூர், குந்தலப்பட்டி, வள்ளியூர், பட்டம்புதூர், தம்மநாயக்கன்பட்டி, சின்னவாடி, வி.முத்துலிங்காபுரம், தாதம்பட்டி, வச்சக்காரப்பட்டி, கன்னிசேரி புதூர், ஒண்டிப்புலி நாயக்கனூர், கட்டனார்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள யூனியன் தொடக்கப்பள்ளி சமையலறைகளை தலா ரூ.50ஆயிரம் மதிப்பீட்டில் புனரமைக்கவும் மன்னார்குடி, சத்திரரெட்டியபட்டி, மற்றும் பட்டம்புதூர் கிராமங்களில் உள்ள பள்ளி கட்டிடங்களை ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மொத்தம் 32 தீர்மானங்கள் விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story