விருத்தபுரீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம்


விருத்தபுரீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம்
x

திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில்:

விருத்தபுரீஸ்வரர் கோவில்

ஆவுடையார்கோவில் அருகே திருப்புனவாசலில் விருத்தபுரீஸ்வரர் கோவில் உள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோரால் பாடல்பெற்றது. முதன்முதலில் உலகில் தோன்றிய பெரிய ஆவுடையார் என்னும் பெருமை வாய்ந்த கோவில் ஆகும்.

இந்த கோவில் க்ருதயுகத்தில் இந்திரபுரம் எனவும், திரேதாயுகத்தில் பிரம்மபுரம் எனவும், துவார யுகத்தில் விருத்த காசி எனவும் அழைக்கப்பட்டு, கலியுகத்தில் வடமொழியில் விருத்த புரி எனவும், தமிழில் பழம்பதி எனவும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த பெருமை குறிய இந்தகோவிலின் வைகாசி விசாகத்திருவிழா தேரோட்டம் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.

தேரோட்டம்

திருவிழா கடந்த 3-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஒரு ேதரில் சிறப்பு அலங்காரத்தில் பிரகண்நாயகி அம்பாள் சமேத பழம்பதிநாதர் எழுந்தருளினர். மற்றொரு தேரில் பிரகண்நாயகி அம்பாள் எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவில் நிலையை வந்தடைந்தது. ஒவ்வொரு வீதிகளிலும் பக்தர்கள் தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து சாமியை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தெப்ப திருவிழா நடைபெற உள்ளது.


Next Story