விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் விழிப்புணர்வு ஊர்வலம்


விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் கீதா ஜெயந்தி விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று காலை நடைபெற்றது. மகாபாரத போரில் அர்ஜூணனுக்கு பகவான் கிருஷ்ணன் அருளியது கீதையே, அதை பின்பற்றும் விதமாக அனைவரும் கீதை வழியே வாழ்க்கையை பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி நடந்த இந்த ஊர்வலத்திற்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். ஈஷா யோகா மைய அமைப்பாளர் பாலமுருகன், சத்யசாய் சேவா மைய மாவட்ட அமைப்பாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆதிவாலீஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தை திருவண்ணாமலை கிருஷ்ணமூர்த்தி, தொடங்கி வைத்தார். பூஜ்ய பரமசுகானந்தா மகராஜ், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் அகில பாரத இணை செயலாளர் நாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த ஊர்வலமானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று சங்கரமடத்தில் முடிவடைந்தது. இதில் விஸ்வ இந்து பரிஷத், ஈஷா யோகா மையம், காஞ்சி சமாஜ், இந்து முன்னணி, பூசாரிகள் பேரவை, சத்யசாய் ஆன்மிக சேவா மையம் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story