அரியானா கலவரத்தை கண்டித்து விசுவ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்
அரியானா கலவரத்தை கண்டித்து விசுவ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம் சார்பில் நாகர்கோவிலில் நடந்தது.
கன்னியாகுமரி
நாகர்கோவில்,
அரியானா கலவரத்தை கண்டித்து விசுவ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம் சார்பில் நாகர்கோவிலில் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
அரியானா மாநிலத்தில் நடந்த விசுவ இந்து பரிஷத் ஊர்வலத்தில் சிலர் கல்வீசியதால் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது.
இதில் 2 போலீசார் உள்பட 6 பேர் கொல்லப்பட்ட னர். இந்த சம்பவத்தை கண்டித்தும், கலவரத்தை தூண்டிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் குமரி மாவட்ட விசுவ இந்து பரிஷத் சார்பில் நேற்று மாலை நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மாவட்ட தலைவர் குமரேசதாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாநில தலைவர் குழைக்காதர் கலந்து கொண்டு பேசினார்.
இதில் நிர்வாகிகள் கார்த்திக், நாஞ்சில் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story