அருணாச்சல பிரதேச கவர்னர் ராணுவ கல்லூரிக்கு வருகை
அருணாச்சல பிரதேச கவர்னர் ராணுவ கல்லூரிக்கு வருகை தந்தார்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் இந்தியா மற்றும் நமது நட்பு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று அருணாச்சல பிரதேச மாநில கவர்னர் பி.டி.மிஸ்ரா டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதியம் 2.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் கோத்தகிரி வழியாக வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு மாலை 6 மணிக்கு வந்தார். கல்லூரிக்கு வருகை தந்த கவர்னர் பி.டி.மிஸ்ராவை மாவட்ட கலெக்டர் அம்ரித் புத்தகம் கொடுத்து வரவேற்றார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உடனிருந்தார். ராணுவ கல்லூரியில் இன்று (புதன்கிழமை) அதிகாரிகளுடன் கவர்னர் பி.டி.மிஸ்ரா கலந்துரையாடுகிறார். இதன் பின்னர் இன்று மாலை மீண்டும் கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார். கவர்னர் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.