மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விழுந் ததில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த கேரள பள்ளி மாணவர் சாவு


மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விழுந் ததில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த   கேரள பள்ளி மாணவர் சாவு
x

குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விழுந் ததில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த கேரள பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார்.

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விழுந் ததில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த கேரள பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

கேரள வாலிபர்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் கோட்டப்புறத்தை சேர்ந்தவர் பிஜூ (வயது 46). இவருடைய மகன் சிபின் (17). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சுதந்திரதின விடுமுறை என்பதால் சிபின், தனது நண்பர் பிரின்சன் (19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரியை சுற்றிப் பார்ப்பதற்காக புறப்பட்டார். அதேபோல், அவருடைய நண்பர்கள் மேலும் 4 பேர்கள் 2 மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளை சிபின் ஓட்டினார். பின்னால் பிரின்சன் அமர்ந்திருந்தார்.

சாவு

அவர்கள் கொல்லங்கோடு, கருங்கல், குளச்சல் வழியாக கன்னியாகுமரிக்கு செல்ல திட்டமிட்டு வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு குளச்சல் அருகே பாலப்பள்ளம் குன்னன்விளை பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சிபின் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி சாலையில் விழுந்தது. இதில் சிபின், பிரின்சன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

சிபின் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் சிபினை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சிபின் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

இதுகுறித்து சிபினின் சகோதரர் ஜோயிசன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஜோஸ்லின் வழக்குப்பதிவு செய்து, விபத்தில் இறந்த சிபினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story