குரூப்-2 தேர்வில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்களிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


குரூப்-2 தேர்வில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு  விலக்களிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 24 Feb 2023 10:22 PM IST (Updated: 24 Feb 2023 10:33 PM IST)
t-max-icont-min-icon

நாளை நடைபெறும் குரூப்-2 தேர்வில் பங்கேற்கும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ் தகுதித்தேர்வில் இருந்து விலக்களிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

சென்னை,

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் மாநில அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு நாளை (பிப்ரவரி 25-ம் தேதி) நடைபெற உள்ளது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர் எழுத உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மாலை என இரு வேளைகளில் தேர்வு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் நாளை நடைபெறும் குரூப்-2 தேர்வில் பங்கேற்கும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ் தகுதித்தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ் தகுதித் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி அகில இந்திய பார்வை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story