வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம்


வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம்
x

துருஞ்சிகுப்பம் கிராமத்தில் வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், வாணியம்பாடி நகர்ப்புற பகுதிகளிலும் 19-ந் தேதி முதல் நாளை (புதன்கிழமை) வரை 6 மாதம் முதல் 60 மாதம் வரை உள்ள 19,691 குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட துருஞ்சிகுப்பம் அங்கன்வாடி மையத்தில் வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமை ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி தொடக்கி வைத்தார்.

முகாமின் போது கூடியிருந்த பொதுமக்களுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்குவதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆலங்காயம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், பகுதி சுகாதார செவிலியர், கிராம சுகாதார செவிலியர், தலைமை ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.


Next Story