குழந்தைகளுக்கு வைட்டமின் திரவம் வழங்கும் முகாம்
குழந்தைகளுக்கு வைட்டமின் திரவம் வழங்கும் முகாம் நடந்தது.
நீலகிரி
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா உப்பட்டி அருகே பழைய நெல்லியாளம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின் டி திரவம் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமை வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு வைட்டமின் டி திரவம் வழங்கினார். பின்னர் அவர் கூறும்போது, இந்த திரவம் குழந்தைகளுக்கு கண் குறைபாடுகளை நீக்குவதற்காக வழங்கப்படுகிறது. வருகிற 24-ந் தேதி வரை அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். இதில் நர்சுகள், ஆஷா பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story