விவேகானந்தர் பிறந்த நாள் விழா பேரணி
கோவில்பட்டியில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா பேரணி நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி புதுகிராமம் இல்லத்தார் நடுநிலைப்பள்ளியில் விவேகானந்தரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேசப்பற்று, நல்லொழுக்கம், தன்னம்பிக்கை, விடா முயற்சி, கண்தானம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் மாணவர்கள் விவேகானந்தர் வேடமணிந்து கலந்து கொண்டனர்.
பேரணி தொடக்க விழாவிற்கு தீப்பெட்டி அதிபர் க. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் சோ.சங்கரன், தலைமை ஆசிரியை இசக்கியம்மாள், பசுமை அறக்கட்டளை ராமலட்சுமி முனியசாமி, நகரசபை கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேதாஜி விவேகானந்தா சேவா சங்க தலைவர் பி.கே.நாகராஜன் வரவேற்று பேசினார். பேரணியை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து பள்ளியில் நிறைவடைந்தது.
Related Tags :
Next Story