விளாத்திகுளம்மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் தேருக்கு கூடாரம் அமைக்கும் பணி


தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம்மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் தேருக்கு கூடாரம் அமைக்கும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நிர்வாக ஆணையர் பொதுநல நிதியிலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் தேருக்கு கூடாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு நடத்தி பணிகளை துரிதமாக முடித்திட பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்திற்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. சென்றார். அங்கு கிராம மக்களிடம் வீடு வீடாக சென்று குறைகள் கேட்டார்.

அப்போது வீரப்பட்டி கிராமத்தில் உள்ள குடிநீர் பிரச்சினை, கால்வாய் பிரச்சினை, சாலை பிரச்சினை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனை கேட்டறிந்த எம்.எல்.ஏ., மக்கள் முன்னிலையில் துறை சார்ந்த அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு மக்களின் கோரிக்கைகள் குறித்து தெரிவித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதில் புதூர் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, பஞ்சாயத்து தலைவர் சுசீலா ராணி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், மரங்கள் மக்கள் இயக்க நிர்வாக அதிகாரி ராகவன் உள்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story