வி.எம்.சத்திரம் வெள்ளநீர் ஓடையை தூர்வார வேண்டும்


வி.எம்.சத்திரம் வெள்ளநீர் ஓடையை தூர்வார வேண்டும்
x

வி.எம்.சத்திரம் வெள்ளநீர் ஓடையை தூர்வார வேண்டும் என்று மேயரிடம் மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி, பொது மக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் அப்துல் ரகுமான் முதலாளிநகர் பொது நலசங்கம் சார்பில் தலைவர் ரவி தலைமையில் மேயரிடம் மனு கொடுத்தனர்.

அதில், அப்துல் ரகுமான் முதலாளி நகரில் 950 பிளாட்டுகளில் 400 குடியிருப்புகள் உள்ளன. இந்த நகரின் மேற்கு பகுதியில் ஆலன்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் மழை காலங்களில் தண்ணீர் நிரம்பி கிழக்கில் உள்ள புளியன்குளத்தில் சேருகிறது. இதற்கான வெள்ள நீர் வடியக்கூடிய ஓடை பராமரிப்பு இல்லாமல் மேடாகி விட்டது. இதனால் மழை வெள்ள காலத்தில் குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் தேங்கி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. எனவே ஆலன்குளம்-புளியன்குளம் வழியான வெள்ளநீர் ஓடையை தூர்வாரி ஆழப்படுத்தி, தெருக்களின் குறுக்கே குழாய் அமைத்து தரரேண்டும், என்று கூறி இருந்தனர்.

இதே போல் பல்வேறு தரப்பு மக்கள் மேயரிடம் மனு கொடுத்தனர்.

முகாமில் பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா, தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story