வ.உ.சி. பூங்காவில் 17-ம் நூற்றாண்டு கல் சிற்பம் கண்டுபிடிப்பு


வ.உ.சி. பூங்காவில் 17-ம் நூற்றாண்டு கல் சிற்பம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 12 Sept 2023 3:15 AM IST (Updated: 12 Sept 2023 3:17 AM IST)
t-max-icont-min-icon

வ.உ.சி. பூங்காவில் 17-ம் நூற்றாண்டு கல் சிற்பம் கண்டுபிடிப்பு

ஈரோடு

ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் செங்கோட்டை வடிவ நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதையொட்டி கவனிப்பாரின்றி உள்ள ஒரு கல்லில் சிற்பம் செதுக்கப்பட்டு இருப்பதை, ஈரோடு அரசு அருங்காட்சியக பணியாளர் ஒருவர் பார்த்தார். இதுகுறித்து அருங்காட்சிய காப்பாட்சியர் பா.ஜென்சிக்கு தகவல் கிடைத்ததும், அவர் சென்று பார்வையிட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, 'இது படைப்பு சிற்ப வகை கல் சிற்பமாகும். 17-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். இறைவனை தொழும் பக்தர் அல்லது, சிற்பத்தைசெதுக்கிய சிற்பி தன்னையே இவ்வாறு செதுக்கி இருக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து முழுமையான ஆய்வுசெய்தால் தகவல்கள் கிடைக்கும்' என்றார். சிற்பத்தை ஆய்வு செய்ய மாநகராட்சியிடம் அனுமதி பெற முடிவு செய்யப்பட்டு உள்ளது.


Next Story