வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் திருப்பூரில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வெள்ளாளர் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சுபிராஜ் முருகேசன், செயலாளர் அன்பரசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.. விழாவையொட்டி திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் வ.உ.சிதம்பரனார் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு வ.உ.சிதம்பரானாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் லதா கேபிள் மோகன், ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநகர பொருளாளர் கார்த்திகேயன், கொங்குநகர் பகுதி செயலாளர் போலார் சம்பத்குமார் மற்றும் வெள்ளாளர் முன்னேற்ற கழக மாவட்ட ஆலோசகர் முருகன், மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி, வடக்கு மாவட்ட செயலாளர் கதிர்வேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.