வ.உ.சி. கல்லூரி பட்டமளிப்பு விழா


வ.உ.சி. கல்லூரி பட்டமளிப்பு விழா
x

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு வரவேற்று பேசினர். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 890 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். பல்கலைக்கழக அளவில் 4 மாணவ, மாணவிகள் தங்கப்பதக்கமும், 16 மாணவ-மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசையும் பெற்றனர்.

நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலர் ஏ.பி.சி.வி.சொக்கலிங்கம், வ.உ.சி. கல்லூரிக் கல்விக்கழக உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து தொழில்துறை புரட்சி 4.0 தொடக்க நிகழ்ச்சி நடந்தது. துணைவேந்தர் சந்தோஷ்குமார் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story