வ.உ.சி. புகைப்பட கண்காட்சி
வாசுதேவநல்லூரில் வ.உ.சி. புகைப்பட கண்காட்சி நடந்தது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தில் 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், குளிரூட்டப்பட்ட அரசு பஸ்சில் நகரும் புகைப்பட கண்காட்சி, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் வேளாண்மை கல்லூரி வளாகத்தில் நடந்தது. நகரும் புகைப்பட கண்காட்சி வாகனத்தை நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் வரவேற்றனர்.
வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த புகைப்பட கண்காட்சியை பாலிடெக்னிக் கல்லூரி, மருத்துவ கல்லூரி, வேளாண்மை கல்லூரி மாணவர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு பயனடைந்தனர். உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர், எஸ்.தங்கப்பழம் கல்வி குழும நிறுவனர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் இரா.தமிழ்வீரன், மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் த.நிர்மலா, வேளாண்மை கல்லூரி முதல்வர் அ.ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.