வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
நெல்லையில் வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நெல்லையில் வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
வ.உ.சிதம்பரனார்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளையொட்டி நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு நேற்று பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை மாவட்ட அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் அமைப்புச்செயலாளர்கள் சுதா பரமசிவன், ஏ.கே.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.பி.ஆதித்தன், ரெட்டியார்பட்டி நாராயணன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மகளிர் அணி செயலாளர் ஜான்சிராணி, இளைஞர் அணி செயலாளர் பால்துரை, ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், அந்தோணி அமல்ராஜா, கே.பி.கே.செல்வராஜ், விஜயகுமார், கவுன்சிலர் சந்திரசேகர், வக்கீல்கள் ஜெயபாலன், அன்பு அங்கப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா-அ.ம.மு.க.
நெல்லை மாவட்ட பா.ஜனதா சார்பில் பொதுச்செயலாளர் வேல் ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.ம.மு.க.வினர் தேர்தல் பிரிவு செயலாளர் குமரேசன் உள்ளிட்டவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ம.தி.மு.க.வினர் துணைச் செயலாளர் மணப்படை மணி தலைமையில் மாலை அணிவித்தனர்.
தே.மு.தி.க.-ச.ம.க.
தே.மு.தி.க.வினர் மாவட்டச் செயலாளர் சண்முகவேல் தலைமையில் மாியாதை செலுத்தினர். சமத்துவ மக்கள் கட்சியினர் மாநில துணைப் பொதுச் செயலாளர் சுந்தர் தலைமையில் மரியாதை செலுத்தினார்கள். மாணவர் அணி துணைச்செயலாளர் நட்சத்திரவெற்றி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
த.ம.மு.க.- புரட்சி பாரதம்
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாநில துணைப் பொதுச்செயலாளர் நெல்லையப்பன், தலைமை நிலைய செயலாளர் சேகர், தொழிற்சங்க செயலாளர் மகேந்திரன், மேற்கு மாவட்ட செயலாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையிலும், புரட்சி பாரதம் கட்சியினர் மாவட்ட செயலாளர் நெல்சன் தலைமையிலும் மரியாதை செலுத்தினார்கள்.
விஜய் மக்கள் இயக்கம்
விஜய் மக்கள் இயக்கத்தினர் தலைவர் சசி, இளைஞர் அணி தலைவர் ராஜகோபால் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அனைத்திந்திய முதலியார், பிள்ளைமார் சங்கத்தினர் மகளிர் அணி மாநில தலைவி வேலம்மாள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மண்டல தலைவர் அனந்த பத்மகுமார், மாவட்ட தலைவர் செந்தில், செயலாளர் மகேஷ், பொருளாளர் செந்தில்வடிவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தினர் முன்னாள் மாநில தலைவர் புளியரை ராஜா தலைமையில் மரியாதை செலுத்தினார்கள்.
வணிகர் சங்க பேரமைப்பு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்ட செயலாளர் நயன்சிங் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர்கள் ஸ்டீபன், மகாலிங்கம், கொம்பையா பாண்டியன், கூடுதல் செயலாளர் விநாயகம், செயற்குழு உறுப்பினர் முகமதுகான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்து பேரவையினர் மாவட்ட தலைவர் கல்லத்தியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சத்திசேனை அமைப்பினர் மாவட்ட தலைவர் முருகானந்தம், பொதுச்செயலாளர் கணேஷ் பாண்டியன், பொருளாளர் இசக்கி பாண்டி ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மணிமண்டப வாசகர் வட்டத்தினர் தலைவர் உக்கிரன்கோட்டை மணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் உதவி கலெக்டர் தியாகராஜன், ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் வேலம்மாள், நூலகர் மங்களம் கவிஞர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் தலைவர் நாறும்புநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பாளையங்கோட்டை-களக்காடு
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் அருகில் உள்ள வ.உ.சி. சிலைக்கு தமிழ் அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தமிழ் நலக்கழகச் செயலாளர் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி, பாரதியார் உலக பொது சேவை நிதிய பொதுச் செயலாளர் கவிஞர் கணபதி சுப்பிரமணியன், மாவட்ட நுகர்வோர் விழிப்புணர் இயக்க துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் சு.முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
களக்காட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த வ.உ.சி. உருவப்படத்திற்கு களக்காடு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வ கருணாநிதி, நகர செயலாளர் மணி சூரியன் உள்பட பலர் மரியாைத செலுத்தினர்.