தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம்; கலெக்டர் தகவல்


தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம்; கலெக்டர் தகவல்
x

திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம் 13-ந்தேதி நடக்கிறது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம் 13-ந்தேதி நடக்கிறது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட அளவில் தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம் 13-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் மத்திய அரசு நிறுவனங்கள் மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி, அரசு போக்குவரத்து மற்றும் செய்யாறு சர்க்கரை ஆலை போன்ற முன்னணி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழில் பழகுனர் பயிற்சிக்கு 100-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளன. அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.யில் பயிற்சி பெற்ற 2022-ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களும், அதற்கு முன்னதாக தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இந்த பயிற்சியில் சேரலாம்.

உதவித்தொகை

ஐ.டி.ஐ.யில் சேர்ந்து பயிற்சி பெற முடியாத 8, 10, 12-ம் வகுப்பு கல்வி தகுதி உடையவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் அப்ரண்டீசாக சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சி, ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை தொழிற் பழகுனர் பயிற்சி பெற்று தேசிய தொழிற் பழகுனர் சான்றிதழ் பெறலாம். இவர்களுக்கு மாதாந்திரம் உதவித்தொகையாக ரூ.6,000 முதல் ரூ.14,000 வரை நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.

தொழிற் பழகுனர் பயிற்சிக்கு பின் பொது பயிற்சி இயக்குனரால் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் தொழிற் பழகுனர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேசிய தொழிற் பழகுனர் சான்றிதழ் வழங்கப்படும். அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் ஓர் ஆண்டு சலுகையும் வழங்கப்படுகிறது.

முகாமுக்கு வருகை தரும் பயிற்சியாளர்கள் www.apprenticeshipinida, gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அதன் விவரத்தையும், அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ் உடன் நேரில் வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story