தொழில், கல்வி கடன் சிறப்பு முகாம்
ராமநாதபுரத்தில் 27-ந்தேதிதொழில், கல்வி கடன் சிறப்பு முகாம் நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் நிறுவனங்களை மேம்படுத்தவும், புதிய தொழில்முனைவோர் தொழில் தொடங்கவும் சிறப்பு தொழில்கடன் வழங்கும் விழா வருகிற 27-ந்தேதி காலை 10 மணியளவில் கலெக்டர் தலைமையில் பீமாஸ் ஓட்டல் விவாஹா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கல்வி கடனுக்கான விண்ணப்ப முகாமும் நடைபெறவுள்ளது. இதில் மாவட்டத்தை சேர்ந்த தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் ஆதார் அட்டை, பேன்கார்டு, ரேஷன் அட்டை மற்றும் தொழில் திட்ட அறிக்கை ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். கல்விகடன் பெற விரும்பும் முதலாமாண்டு கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது ஆதார் அட்டை, மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி கட்டண விவரம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். இதில் அனைத்து வங்கி மேலாளர்களும் கலந்து கொள்கின்றனர். எனவே இச்சிறப்பு தொழிற் கடன் வழங்கும் விழா மற்றும் கல்வி கடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.