தொழிற்பயிற்சி அலுவலர்கள் உண்ணாவிரதம்


தொழிற்பயிற்சி அலுவலர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 30 July 2023 12:15 AM IST (Updated: 30 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் தொழிற்பயிற்சி அலுவலர்கள் உண்ணாவிரதம் இருந்தனா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் சார்பில் நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். கடலூர் கிளை தலைவர் பாலமுருகன் வரவேற்றார். விழுப்புரம் மண்டல செயலாளர் தெய்வராஜா கோரிக்கை விளக்கவுரையாற்றினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி நிறைவுரையாற்றினார். திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் அறிவித்துள்ளவாறு சான்றிதழ்தாரர்களுக்கு முதல்வர் பதவி உயர்வு வழங்க வேண்டும், அனைத்துநிலை தொழில்நுட்ப காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 6 யூனிட்டுக்கு ஒரு பயிற்சி அலுவலர் என பணியிடங்களை உயர்த்த வேண்டும், இத்துறையில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பயிற்றுனர்கள் மற்றும் உதவியாளர்களை தமிழக அரசின் தேர்தல்கால வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் கிளை தலைவர்கள் சந்தோஷம், சம்பத்குமார், துளசி, ராம்பிரபு, சேஷாத்திரி, பாலகிருஷ்ணன், கல்பனா, கிளை செயலாளர்கள் சுரேஷ்குமார், கார்த்திகேயன், வேல்முருகன், வேலு, மீனா, ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கிளை செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.


Next Story