அண்ணாமலை பல்கலைக்கழக சுரங்கவியல் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி ஆணை


அண்ணாமலை பல்கலைக்கழக  சுரங்கவியல் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி ஆணை
x

அண்ணாமலை பல்கலைக்கழக சுரங்கவியல் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி ஆணை வழங்கப்பட்டது.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலம் மற்றும் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் (என்.எல்.சி. இந்தியா நிறுவனம்) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுரங்கவியல் பட்டப் படிப்பானது பொறியியல் புல வளாகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2019-20-ம் கல்வியாண்டில் பட்டயம் பெற்ற மாணவ-மாணவிகள் 60 பேருக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணி பயில்பவர்களாக பணிபுரிவதற்கான ஆணை வழங்கும் விழா பல்கலைக்கழக சுரங்கவியல் கட்டிடத்தில் நடந்தது.

விழாவிக்கு வந்த அனைவரையும் சுரங்கவியல் பட்டயபடிப்பின் இயக்குனர் சரவணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நெய்வேலி என்.எல்.சி. பழுப்பு நிலக்கரி சுரங்கம் 1 ஏ முதன்மை பொது மேலாளர் ஜான்பர்ரோஸ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி ஆணையை வழங்கினார். விழாவில் பொறியியல் புல முதல்வர் முருகப்பன், என்.எல்.சி. முதன்மை மேலாளர் வேலவன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனர் பாலசுப்பிரமணியன், பொறியியல் புலவேலைவாய்ப்பு பயிற்சி மைய அதிகாரி முதன்மை கணபதி மற்றும் பல்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டடனர். முடிவில் சுரங்கவியல் பட்டயப்படிப்பின் இணை இயக்குநர் மணிகண்டன் நன்றி கூறினார்.


Next Story