மணிமேகலை விருது பெற தன்னார்வ அமைப்பினர் விண்ணப்பிக்கலாம்
மணிமேகலை விருது பெற தன்னார்வ அமைப்பினர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிமேகலை விருது
2022-23-ம் ஆண்டிற்கான மணிமேகலை விருது மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவைகளுக்கு வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த விருதை பெற விண்ணப்பிக்கலாம்.
எனவே மேற்காணும் விருதிற்கு தகுதியான சமுதாய மக்கள் அமைப்புகளிடமிருந்து வட்டார இயக்க மேலாண்மை அலகில் வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று பரிசீலித்து அதனை 6 காரணிகளின் அடிப்படையில் தரமதிப்பீடு செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்கலாம்
தகுதியான சமுதாய அமைப்புகளின் கருத்துருக்களை உரிய ஆவணங்களை ஆய்வு செய்து ஒவ்வொரு சமுதாய அமைப்பிற்கும் முதல் மதிப்பெண் வாங்கிய சமுதாய அமைப்புகளை மாவட்ட அளவில் திட்ட இயக்குனர் மற்றும் உதவித்திட்ட அலுவலர்கள் விண்ணப்பித்த சமுதாய அமைப்புகளின் கருத்துருக்களை நேரில் ஆய்வு செய்து மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு ஜூலை மாதம் 8-ந் தேதிக்குள் அனுப்பிட வேண்டும்.
மேலும் 2022-23-ம் ஆண்டிற்கு மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்களை சமர்பிப்பது உள்ளிட்ட கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல் கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.