திருச்சி மாவட்டத்தில் 300 போலீசாருக்கு விருப்பப்படி பணியிட மாற்றம்
திருச்சி மாவட்டத்தில் 300 போலீசாருக்கு விருப்பப்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
திருச்சி
திருச்சி மாவட்ட போலீசாருக்கான பணியிட மாற்ற கலந்தாய்வு நேற்று ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் சுமார் 300 போலீசார் கலந்து கொண்டு தாங்கள் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டிய இடங்கள் குறித்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 300 பேருக்கும் அவரவர் பணியிட மாறுதல் கோரிய இடத்திற்கு விருப்பப்படி பணியிட மாறுதல் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனால் திருச்சி மாவட்ட காவலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story