சத்து மாத்திரை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்

சத்து மாத்திரை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்
x

சத்து மாத்திரை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்

சிவகங்கை

சிவகங்கை அடுத்த தமறாக்கி வடக்கு அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 47 மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் சத்து மாத்திரை வழங்கப்பட்டது. இந்த மாத்திரையை சாப்பிட்ட அவினா(வயது 10), சாதனா(12), அபிதா(12), சுப்ரியா(12), விஷ்ணு தரன்(10), தமிழ் ஸ்ரீ(11), கனிமொழி(12) உள்பட 13 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சிகிக்சைக்காக அவர்களை தமறாக்கி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்பு அவர்கள் வீடு திரும்பினார்கள்.

Next Story